கார் ஓட்டுநர் கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !
கோவையில் கார் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலை வேலப்பர் வீதியைச் சேர்ந்த பாலகுமார். இவர் மருத்துவர் ஒருவரிடம் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவருக்கு கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், சிவா ஆகிய இரண்டு பேருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர்கள் பெயிண்டராக வேலை செய்து வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பாலகுமாரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரி வழியாக நடந்து சென்றார். அப்பொழுது நாகராஜ், சிவா ஆகிய இருவர் குடிப்பதற்கு பணம் கேட்டு உள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று பாலகுமார் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சிவா கத்தியால் பாலகுமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு குறித்து துடியலூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து நாகராஜ், சிவா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழங்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடைபெறும் வன்கொடுமை தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தர் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ், சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story



