கோவையில் 'மோடியின் தொழில் மகள்' நிகழ்ச்சி மற்றும் ஓவியக் கண்காட்சி !
கோவை கணபதி வாஜ்பாய் திடலில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'மோடியின் தொழில் மகள்' பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு 75 ஓவியங்களைக் கொண்ட கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துறை ஆகியோர் திறந்து பார்வையிட்டனர். இதில் மோடியின் சிறு வயது காலத்திலிருந்து பிரதமர் பொறுப்புக்குப் பின் வரையிலான வாழ்க்கை, ஏழை மக்களுக்கு ஆதரவு, சூரிய மின்சாரம், வேளாண்மை மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சர்வதேச நட்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கோவையிலிருந்து வந்த ஓவியர் பரிதி ஞானம் கூறியதாவது, அக்ரிலிக் பெயின்டிங் முறையில் மோடியின் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பெண்களை சுயதொழில் முனைவோராக உருவாக்க பல தொழில்துறை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
Next Story




