“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை ஆய்வு செய்த எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகமை இன்று (20/09/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் சென்று ஆய்வு செய்தார் . ஆய்வின்போது, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மருத்துவ நல அலுவலர் யாழினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story





