போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

X
தீபாவளிக்கு முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளியின் 30 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகளையும், ஓய்வுக்காலப் பணப் பயன்களையும் வழங்காமல் 24 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பதை கைவிட்டு தீபாவளிக்கு முன்பாகவாவது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இணைந்து கடந்த 33 நாட்களாக தமிழகம் முழுவதும் 22 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

