தூய்மை பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சியில் தூய்மை தமிழ்நாடு நிறுவனம் ஏற்பாட்டில் "தூய்மை இயக்கம் 2.O" திட்டம் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை இன்று ( செப்.20) காலை வணிக வரித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார். மொத்தம் 13 கிராமங்களின் 360 தெருக்களை உள்ளடக்கிய சுமார் 4.5 கி.மீ நீளத்திற்கு நடைபெறும் இந்த தூய்மைப் பணியில் 500க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
Next Story




