திருச்செந்தூரில் கடல் அலை சீற்றம்: பெண் காயம்!

திருச்செந்தூரில் கடல் அலை சீற்றம்: பெண் காயம்!
X
திருச்செந்தூர் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருச்செந்தூர் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி தமிழ்செல்வி (50). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கு, கடலில் குளிக்கும்போது அலையின் சீற்றத்தில் சிக்கி தமிழ்செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீஸ் ஏட்டுகள் சித்ராதேவி, அந்தோணி சதீஷ் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் தமிழ்செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story