தூக்கிட்டு சிறுமி தற்கொலை

தூக்கிட்டு சிறுமி தற்கொலை
X
மதுரை கொட்டாம்பட்டி அருகே சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஆலம்பட்டி பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் 15 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் எந்த வேலையும் பார்க்காமல் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வைரவன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்துள்ளார். அங்கு மாமா கண்ணனின் செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார். நேற்று (செப் .19)காலை அவரிடமிருந்து மாமா செல்போனை வாங்கிக் கொண்டு வேலைக்கு சென்று விட்டார். இதில் வேதனையடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story