ஜெயில் சென்ற பேரூராட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்யாதது ஏன் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை கொசவம்பாளையம் சாலை பிரிவு பகுதியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக அண்ணாதுரை என்பவர் தலைமையில் பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிசாமி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமியை வாகனத்தில் ஏற்றி கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள நிலையில் நிவாரணம் கோரி அவரை பதவி நீக்கம் செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,அப்போது குடும்பத்தார் கண்ணீரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து உயிரிழந்த பழனிசாமியின் மகன் சுகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் விநாயகா பழனிச்சாமி தரப்பினர் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற கோருவதாகவும் அதேபோல தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறியும் இதனால் தங்கள் சிறு குடும்பம் சின்னாபின்னம் ஆகிவிட்டது என்றும் வாழ வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு ஆறுதலுக்கு கூட முன்வரவில்லை அலுவலர்களும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் தங்களை பொருட்படுத்திக் கொள்ளவில்லை என்றும் இதனால் தங்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் நிவாரண உதவியும் தர வேண்டும் என்று கோரினர்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

