தேவர்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது

தேவர்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது
X
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தேவர்குளத்தில் தனியார் பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இந்த இலவச மருத்துவ முகாமில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மனநலம், கண் மருத்துவம், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.
Next Story