ராயக்கோட்டயில் தொழிலாளி போக்சோவில் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டயை 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக, சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வத்ததை அடுத்து கெலமங்கலம் வட்டார சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் சுமதி விசாரணை மேற்கொண்டார். இதில் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்ராயன்(22) என்பவருக்கும் அந்த 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறுப்படுகிறது. மேலும் சிறுமிக்கு உடல் நல குறைவால் சிறுமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து ஊர் நல அலுவலர் சுமதி கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், சென்ராயனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Next Story

