தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பெண்மணி ஒருவர் பலி
விபத்தில் இறந்து போன பெண்ணின் குடும்பத்தாருக்கு உதவிய பெரம்பலூர் SDPI கட்சியினர் 20-09-2025 அதிகாலை 4 மணி அளவில் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த குர்ஷித் பேகம் என்கிற பெண்மணி தனது மகனோடு இரு சக்கர வாகனத்தில் பெரம்பலூர் விஜய கோபாலபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது நாய் குறுக்கிட்டு விபத்து ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்கள்.. பெரம்பலூர் SDPI கட்சியினரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் கேட்டு கொண்டதன் பேரில், பாடாலூர் காவல் நிலையத்தில் பேப்பர் work முடித்து கொடுத்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடறகூராய்வு முடித்து ஜனாசா நல்ல முறையில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனித நேய பணியில் பெரம்பலூர் SDPI தொண்டரணி மாவட்ட செயலாளர் முஹம்மது சல்மான், முன்னாள் மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், பாடாலூர் கிளை நிர்வாகி அப்துல் ரஹ்மான், சலீம் பாய் ஆகியோர் முன்னின்று இந்த பணிகளை செய்தனர்.
Next Story



