டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயம் ஒருவர் கைது

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயம் ஒருவர் கைது
X
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அய்யம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சிரஞ்சீவி, 35.கூலித் தொழிலாளி. இவர் செப்.  13ல் மெடிக்கல் ஸ்டோர் வருவதற்காக, தனது பேஷன் புரோ வாகனத்தில் இடைப்பாடி சாலையில் சுப்ரமணி டீக்கடை அருகே இரவு 08:30 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த ஹோண்டா டியோ வாகன ஓட்டுனர், இவர் மீது மோத, சிரஞ்சீவி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான சங்ககிரி, புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி லோகேஸ்வரன், 19, என்பவரை கைது செய்தனர்.
Next Story