பா.ஜ.க.வில் மாநில செயலராக வழக்கறிஞர் நியமனம்

X
Komarapalayam King 24x7 |20 Sept 2025 8:09 PM ISTபா.ஜ.க.வில் மாநில செயலராக குமாரபாளையம் வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டார்.
குமாரபாளையம் வழக்கறிஞர் சரவணராஜன் பா.ஜ.க. மாவட்ட பொது செயலராக செயல்பட்டு வந்தார். இவர் தற்போது அரசு தொடர்பு பிரிவு, மாநில செயலராக மாநில அமைப்பாளர் சூர்யநாராயணன் நியமனம் செய்து, அவரது பணி சிறக்க வாழ்த்தினார். அரசு தொடர்பு பிரிவு, மாநில செயலராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் சரவணராஜனை நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், மலர்மாலை அணிவித்தும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் நகர பா.ஜ.க. தலைவர் வாணி, மாவட்ட துணை தலைவர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, வி.எச்.பி. நகர தலைவர் சுகுமார், ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் கிருஷ்ணன், நகர பொது செயலர் கலைச்செல்வன், முன்னாள் நகர தலைவர்கள் கணேஷ், ராஜூ, இளைஞர் அணி மாவட்ட செயலர் கிஷோர், அ.தி.மு.க. நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிச்சாமி, சமூக ஆர்வலர்கள் பண்டியன், பிரகாஷ், பள்ளிபாளையம் நகர தலைவர் லோகேஸ்வரன், மாவட்ட செயலர் ஹரிஹரன் உள்பட பலரும் பங்கேற்று நேரில் வாழ்த்தினர்.
Next Story
