நாலு லட்சம் மதிப்புள்ள கேமரா செல்போன் திருட்டு செல்போன் சிக்னல் சிசிடி கேமரா காட்சிகளை வைத்து இரண்டு மணி நேரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார்
Tiruchengode King 24x7 |20 Sept 2025 8:41 PM ISTதிருச்செங்கோட்டை அடுத்த கைலாசம்பாளையம் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் அலுவலகத்தில் இருந்துரூ 3.5 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன் என4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த விக்கி குமார் என்ற 37 வயது நபர் கைது
திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம்பாளையம் பகுதியில் நிலா டிவி என்ற உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வருபவர் கோகுல்ராஜ். இவர் நேற்று சேந்தமங்கலத்தில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக ஆறு கேமராக்களை கொண்டு சென்று விட்டு அவரும், அவரது நண்பர்கள் ஈரோட்டை சேர்ந்த ராஜா மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் இரவு சுமார் ஒரு மணி அளவில் சேந்தமங்கலத்தில் இருந்து 6 கேமராக்களுடம் கடைக்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதாலும் அசதியாக இருந்தாலும் கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று விட ராஜா மற்றும் செல்வகுமார் ஆகியோர் கடையின் அரை கதவை ஒரு பெஞ்சை வைத்து வைத்து சாத்திவிட்டு கேமராக்களை உள்ளே வைத்துவிட்டு உறங்கி உள்ளனர். இவர்கள் அசந்து தூங்குவதை கண்டஅந்தப் பக்கமாக வந்த வடநாட்டைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் நைசாக கடைக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பேரின் செல்போன்களையும் முன்னால் வைத்திருந்த ரூ 3.5 லட்சம் மதிப்புள்ள வீடியோ கேமராஒன்றையும் திருடி சென்றுள்ளார். காலை சுமார் 9 மணிக்கு விழித்துப் பார்த்தபோது கேமரா மற்றும் செல்போன்கள் பறிபோய் இருப்பதை அறிந்தராஜாவும் செல்வகுமாரும் இது குறித்து கோகுல்ராஜிடம் தெரிவித்துள்ளனர் உடனடியாக கோகுல்ராஜ் இது தொடர்பாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காணாமல் போன இரண்டு செல்போன்களையும் டிரேஸ் செய்து பார்த்தபோது ஒரு செல்போன் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ஒரு செங்கல் சூலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக எஸ்எஸ்ஐ சிவகுமார் தலைமையில் போலீசாரை அனுப்பி ஆய்வு செய்தபோது செங்கல் சூலையில் வேலை செய்து வந்தபடி அங்கேயே ஒரு வீட்டில் தங்கி இருந்த பீகாரைச் சேர்ந்த விக்கி குமார் என்ற நபரிடம் அந்த செல்போன் இருப்பதும் அவரிடம் கேமரா இருந்ததும் தெரிய வந்தது செல்போன் மற்றும் கேமராவை பறிமுதல் செய்த போலீசார் விக்கி குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். புகார் பெற்ற 2 மணி நேரத்தில் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடனை பிடித்த போலீசார் கைது செய்யப் பட்ட விக்கி குமாருக்கு வேறு சம்பவங்களில் தொடர்புள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story


