ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க முதல் மாவட்ட மாநாடு

X
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க முதல் மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாள் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் சத்திய கீர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர் செயல் அறிக்கையையும், நிதி காப்பாளர் ஜெகஜீவராம் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர். மாநில செயலாளர் கோமதிநாயகம் கொடியேற்றி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் கருணாகரன் உட்பட பலர் பேசினர். மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மாநில துணை தலைவர் மூர்த்தி நிறைவுரையாற்றினார். ஊராட்சி உதவியாளர்கள் பணிகாலத்தில் 50 சதவீதத்தினை அவர்களது ஓய்வூதியத்திற்கு எடுத்துகொள்ள வேண்டும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள ஒய்வூதியர்கள் குறித்த திருத்த சட்டத்தினை அமுல்படுத்த கூடாது பழைய ஒய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தவேண்டும். ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மனோகரன், ராஜகோபால், ராஜ்மோகன், பன்னீர்செல்வம், ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரி வரவேற்றார். முடிவில் பொறுப்பாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Next Story

