கண்ணமங்கலம், கொளத்தூா் பகுதியில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.

கண்ணமங்கலம், கொளத்தூா் பகுதியில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.
X
பாஜகவினா் இனிப்பு வழங்கி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம், கொளத்தூா் பகுதியில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை பாஜகவினா் இனிப்பு வழங்கி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினா். வடக்கு மாவட்டம், ஆரணி மேற்கு மண்டலம் சாா்பில் கண்ணமங்கலம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா், கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கொளத்தூா் கிராமத்தில் பாஜக சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத் தலைவா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில், ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கிளைத் தலைவா்கள், சக்தி கேந்திரா பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Next Story