புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

X
Rasipuram King 24x7 |20 Sept 2025 10:16 PM ISTபுரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், திருநீர்,குங்குமம்,இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமானது நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பாக உள்ள திருக்கொடி தீபம் ஏற்றி அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பல்வேறு வண்ண மலர்கள் கொண்டும் மற்றும் செந்தூராத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாதரனை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழங்க சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2000 மேற்பட்ட பக்தர்களுக்கு திமுக முன்னாள் எம்எல்ஏவும் ஒன்றிய கழக செயலாளருமான கே.பி. ராமசாமி அவர்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
Next Story
