தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா.

X
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ராஜு தலைமை வகித்தாா். ஹாா்ட்புல்னெஸ் இதயநிறைவு பயிற்சியாளா் பி.சி.காா்த்திகேயன், இயற்கை விவசாய சங்கத் தலைவா் ஜெயக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜீவானந்தம், முன்னாள் ராணுவ வீரா்கள் ஏழுமலை, கேப்டன் கருணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறங்காவலா் குழுத் தலைவா் சுந்தரராஜன் வரவேற்றாா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் திருமால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்துப் பேசினாா். விழாவில் கோயில் பணியாளா்கள், அரசு அலுவலா்கள், மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். முடிவில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அருண்மொழி நன்றி கூறினாா்.
Next Story

