கிருஷ்ணகிரி: டூவீலர்கள் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஒள்ள பெட்டமுகிலாளம் பகுதியை சோ்ந்தவா் சஞ்சய்குமார் (23). ராணுவ வீரர். இவா் விடுமுறையில் கிராமத்துக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் தனது மாமா சக்திவேல் (31)விவசாயி என்பவருடன் டூவீலரில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தாளாப்பள்ளி ஏரிக்கரை அருகே நேற்று சென்ற போது, எதரே வந்த டூவீலரில் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயமடைந்த சக்திவேல் சம்வ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சஞ்சய்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

