தேன்கனிக்கோட்டை: அரசு பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தத மரக்கிளைகள்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்காளாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்தக்காற்றுடன் பெய்த கனமழையால் தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருந்த பழைமை வாய்ந்த பெரிய புளிய மரம் கிளை முறிந்து அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்தது. இதில் பள்ளி கட்டிடத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

