காருடையாம்பாளையம்-விபத்தில் ஏற்பட்ட கால் வலியால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
காருடையாம்பாளையம்-விபத்தில் ஏற்பட்ட கால் வலியால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா காருடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 33. கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி காருடையாம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையோடு வாழ்ந்து வந்த சிலம்பரசன் வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசனின் மனைவி பேச்சியம்மாள் வயது 23 என்பவர் அளித்த புகாரில் க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story




