வேளாண்துறை சார்பில் கண்காட்சி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வேளாண்துறை சார்பில் கண்காட்சி  அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
X
தாராபுரத்தில் வேளாண்துறை சார்பில் கண்காட்சி கருத்தரங்கு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரண வரே, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் பொருட் கள் மற்றும் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் கையேடுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (வேளாண்மை) சுந்தரவடிவேலு, இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) சந்திரன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புகண்ணன், தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story