ஹோட்டல் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் தெரு எதிரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாண்டி மகன் செல்வம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். காலை 7 மணிக்கு கடைக்கு சென்றால் இரவு 12 மணிக்கு தான் விடுவார்கள். மூன்று நேரம் அதே ஹோட்டலில் தான் சாப்பாடு. அங்கு சாப்பிடுதல் விளைவாக கிட்னியில் உப்பு சத்து கூடி தற்பொழுது தேனி கானா விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வத்தலகுண்டு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருகிறார். இது குறித்து வெளியில் சொன்னால் செல்வம் மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் பிடித்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் கடை உரிமையாளர்கள் சென்றாயன் பாண்டி மற்றும் செல்வம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story

