திருக்காம்புலியூர்-சட்டவிரோத மது விற்பனை.ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல்.
திருக்காம்புலியூர்-சட்டவிரோத மது விற்பனை.ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பால கிருத்திகாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திருக்காம்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் முத்து கருப்பன் என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர் விற்பனைக்கு வைத்திருந்த 29 குவார்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் முத்துக்கருப்பனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர்.
Next Story






