கரூர் -எடப்பாடியார் கரூர் வருகைக்காக எம் ஆர் வி தலைமையில் ஏற்பாடு.

கரூர் -எடப்பாடியார் கரூர் வருகைக்காக எம் ஆர் வி தலைமையில் ஏற்பாடு.
கரூர் -எடப்பாடியார் கரூர் வருகைக்காக எம் ஆர் வி தலைமையில் ஏற்பாடு. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையோடு தமிழகம் முழுவதும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் நிலைப்பாடு குறித்தும் திமுக அரசின் ஏதோச்சதிகார போக்கை கட்சியினரிடையே விளக்கி எழுச்சி உரையாற்றி வருகிறார். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்திற்கு வரும் 25 ,26 தேதிகளில் வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும், அவரது பேச்சு கரூர் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவும் கரூர் கிழக்கு ஒன்றியம் மன்மங்கலம் ஊராட்சி,என் புதூர், கடம்பன்குறிச்சி, வாங்கல் ஊராட்சியிலும் கட்சியினரிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் கூட்டங்களை சிறப்பித்து வருகின்றனர்.
Next Story