அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

X
செய்யூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடையம்பாக்கம், நாங்களத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர்கள் சிற்றரசு, எம். எஸ்.பாபு, ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக விசிக கட்சி நிர்வாகிகள் தசரதன், அர்ஜுனன், ஐயப்பன், சாந்தி ரவிக்குமார், நிர்மல் குமார்,முரளி, கார்வேந்தன், ராஜசேகர், பன்னீர்செல்வம், சக்திவேல், மனோகரன், திருநாவுக்கரசு, கோதண்டராமன், சிவா, சிவகுமார், சக்திவேல், மனோகர், மகாதேவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

