அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை

X
அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 69 லட்சம் மதிப்பிலான நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு மற்றும் நபார்டு வங்கி மூலம் ரூபாய் 69 லட்சம் மதிப்பிலான நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதியின் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ரங்கநாதன், ஹேமநாதன், ராணி பாண்டுரங்கன், ராமமூர்த்தி, சிவகுமார், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

