இடக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

இடக்கழிநாடு பேரூராட்சி பகுதியில்  நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
X
*செய்யூரில் தொகுதி இடக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 1500 பேருக்கு மருத்துவ சிகிச்சை*
செய்யூரில் தொகுதி இடக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 1500 பேருக்கு மருத்துவ சிகிச்சை செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுத்தஅய்யனார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ.,, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மூ. பாபு ஆகியோர் மருத்துவ முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து முகாமினை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வீடு தேடி மருத்துவ பெட்டகம் , உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிற்றரசு, ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு மூட்டு மருத்துவம், மகப்பேறு மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சித்த மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, மனநல மருத்துவம், தோல் மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அட்டை, காப்பிடத்தை ஆகியவை பதிவு செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
Next Story