திமுக தவெகஉள்ளிட்ட கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
Tiruchengode King 24x7 |21 Sept 2025 12:52 PM ISTதிருச்செங்கோடு நகரப் பகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும்தவெகஉள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்நகர அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் அங்கமுத்து தலைமையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
திருச்செங்கோடு நகரஅதிமுக செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான அங்கமுத்து ஏற்பாட்டின் பேரில் திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர்,குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.கட்சியில் இணைந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார் தொடர்ந்துகட்சியில் இணைந்தவர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என கட்சியில் இணைந்தவர்களை கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர்,நகர துணைச் செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் அம்மா பேரவை நகரச் செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கூட்டப்பள்ளி பகுதி நகர் மன்ற உறுப்பினர் மல்லிகா,மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல்,ஆகியோர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story


