வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வை

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வை
X
திக்கணம் கோடு
குமரி மாவட்டம் திங்கள்சந்தை - புதுக்கடை சாலையில்  திக்கணங்கோடு சந்திப்பில்  பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வழியாக  செல்லும்  79 வழியோர கடலோர  கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின்  500 மி.மீ விட்டமுள்ள  குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் 20 பேருராட்சி, ஊராட்சிகளுக்கும் குடிநீர்  வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story