தாராபுரம் அமராவதி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்

தாராபுரம் அமராவதி ஆற்றில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு 1000. கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
தாராபுரம் அமராவதி ஆற்றில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு 1000. கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த நாளில், முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபடுவது வழக்கம். மேலும், இந்த நாளில் தர்ம காரியங்கள் செய்வதும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் சிறந்தது. ​இந்த சடங்கில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து, எள் மற்றும் அரிசி மாவால் ஆன பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். இந்த சடங்கில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து, எள் மற்றும் அரிசி மாவால் ஆன பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: மகாளய அமாவாசையை யொட்டி முன்னிட்டு முன்னோர்களுக்கு தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள படித்துறையில் திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.இது இந்துக்களின் மிகப் புனிதமாக கருதப்படுகின்றது தை அமாவாசை, மகாலி அமாவாசை, ஆடி அமாவாசை, ஆகிய மூன்று தினங்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. தாராபுரம் அமராவதி ஆற்றில் புனித நீராடி பழம், எள்ளு,தண்ணீர் ஆகிவற்றிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கான தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். தொடர்ந்து இன்று தாராபுரம் நகர் பகுதி மட்டும் இல்லாமல் கோவிந்தாபுரம், சத்தரம், குண்டடம், பகவான் கோவில், குமாரபாளையம், கரையூர், காளிபாளையம், உள்ளிட்ட ஏராளமான சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர். தாராபுரம் அமராவதி ஆற்றில் தங்களின் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதனால் மகாளய அமாவாசை அன்று இது போன்ற முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலமாக இந்த ஆண்டு முழுவதும் அவர்களுக்கு கிடைக்க கூடிய உணவு, மற்றும் தண்ணீர் என்பது கிடைப்பதாகவும். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதாகவும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆசை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story