கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் நீர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்டிப்பு பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 3,237 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 2,868 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,984 கனஅடி தண்ணீர் சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. அதனால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விக்கபட்டுள்ளது.
Next Story

