சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, நேற்று துாய்மை பணி

சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, நேற்று துாய்மை பணி
X
சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, நேற்று துாய்மை பணி
செங்கல்பட்டு மாவட்டம்,கோவளம் கடற்கரை பகுதியில், சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, நேற்று துாய்மை பணி நடைபெற்றது.இதில், திருப்போரூர் தாசில்தார் சரவணன், கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா, தனியார் கல்லுாரி பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அனைவரும் கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினர். நெகிழிப் பைகள் பயன்படுத்தக் கூடாது, மஞ்சப்பை, காகிதப்பை பயன்படுத்த வேண்டுமென, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பிலும், கோவளம் கடற்கரையில் துாய்மைப்பணி நடந்தது. தமிழக பா.ஜ., மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story