ஓசூர் அருகே டூவீலர்களை திருடியவர் நபர் கைது

X
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சிக்க திம்மன அள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (30) இவர் ஓசூரில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி அன்று தனது நிறுவனத்தின் முன்பாக இவர் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். வந்து பார்த்த போது டூவீலரை மர்ம நபர் திருடிச் சென்றார். இதே போல் பாகலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் அப்துல்லா இவரது டூவீலரை திருடி சென்றார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் டவுன் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள பன்னிஅள்ளியை சேர்ந்த அருணாசலம் (25) என்பதும் டூவீலரை திருடியவர் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அருணாசலத்தை போலீசார் கைது செய்து 2 டூவீலரை பறிமுதல் செய்தனர்
Next Story

