கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகே காட்டு யானைகள் தண்ணீர் குடித்த வீடியோ வைரல் !

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகே காட்டு யானைகள் தண்ணீர் குடித்த வீடியோ வைரல் !
X
வனத்துறை தொட்டியில் தண்ணீர் குடித்த காட்டு யானைகள் .
கோவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு அருகே, வனத்துறை அமைத்து வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் ஆறு காட்டு யானைகள், அதனுடன் மூன்று குட்டிகளும் வந்து தண்ணீர் குடித்தன. வறட்சி காரணமாக உணவும், தண்ணீரும் தேடி கிராமப் பகுதிகளில் அலைந்துவரும் யானைகள், வனத்துறையினர் நிரப்பி வைத்திருந்த தொட்டியில் தாகத்தை தணித்த காட்சி அப்பகுதி நபர் ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Next Story