மேற்கு மண்டல காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி !

X
கோவை, மேற்கு மண்டல காவல் காவல்துறையால் கோவை மாவட்ட மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் உயர் அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. பிஸ்டல் மற்றும் இன்சாஸ் பிரிவுகளில் நடந்து கொண்ட இந்த போட்டியில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்தார். மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. செந்தில்குமார் இரண்டாம் இடத்தை பிடித்தார். கூடுதல் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான போட்டியில் பிஸ்டல் பிரிவில் கோவை நான்காம் அணி உதவித் தளவாய் பூபதி முதலிடம், இன்சாஸ் பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story

