தூத்துக்குடி அருகே பெண்ணின் தலை கண்டெடுப்பு பரபரப்பு

X
தூத்துக்குடி பண்டாரம் பட்டி சுடுகாடு அருகே அழுகிய நிலையில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்த சம்பவத்தால் பரபரப்பு; காவல்துறையினர் விசாரணை உடல் அருகே உள்ள ஓடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தூத்துக்குடி பண்டாரம் பட்டி கிறிஸ்தவ தேவாலயம் அருகே சுடுகாடு அமைந்துள்ளது இந்நிலையில் இன்று பிற்பகல் அந்தப் பகுதியில் அழுகிய நிலையில் தலை கண்டெடுக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை ஒன்று கம்மலுடன் கிடைத்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து தகவல் கிடைத்த சிப்காட் காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டும் மோப்ப நாய் மூலம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் யாரேனும் கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதியில் வீசப்பட்டாரா? அல்லது அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் இறந்தவரின் தலை எதுவும் நாய்கள் கடித்துக் கொதறி இழுத்து வந்ததா? என சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

