தர்மபுரியில் பூக்கள் விலை சரிவு

தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு விவசாயிகள் கவலை
தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் புரட்டாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பூக்களின் விலை கடுமையாக சரிந்தது. இன்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.200, சன்னமல்லி கிலோ 180 ரூபாய், கனகாம்பரம் கிலோ 210 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 150 ரூபாய், சம்பங்கி கிலோ 40 ரூபாய்,  சாமந்திப்பூ கிலோ 10 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.30 செண்டு மல்லி ஒரு கிலோ 10 ரூபாய். அரளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் என பூ மார்க்கெட்டில் விற்பனையானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
Next Story