அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அக்னி பஜார் பகுதியில் 3-ம் ஆண்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை உரிமையாளருக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
Next Story





