ராசிபுரம் நகராட்சி பகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
X
ராசிபுரம் நகராட்சி பகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்குபட்ட 14வது வார்டு பொதுமக்கள் குழு, மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கன்னட சைனிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இதில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார்கள். இதில் மகளிர் நல மருத்துவம் . பொது மருத்துவம் . கண் பரிசோதனை.‌ எலும்பு முறிவு மூட்டு மாற்று முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை.‌பரிசோதனை. பித்தப்பை கற்கள் சிறுகுடல் மற்றும் பெருகுடல் அடைப்பு குறித்த மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் இசிஜி.‌ இரத்த அழுத்த பரிசோதனை. ரத்தத்தில் சர்க்கரை அளவு. இருதய துடிப்பு. ஆக்சிஜன் அளவு போன்றவை குறித்து இலவச பரிசோதனை செய்து ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினார்கள்.‌ இந்த முகாமினை ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், மற்றும் திமுக நகரச் செயலாளர் என்.ஆர். சங்கர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஆர்.விநாயகமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தார்கள்.. மேலும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற பொதுமக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் முகாமில் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் Royal Events மற்றும் விவேகானந்தா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் 14வது வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Next Story