ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ராயல் கிங் சதுரங்க அகாடமி இணைந்து நடத்திய, நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ..

X
Rasipuram King 24x7 |21 Sept 2025 7:44 PM ISTஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ராயல் கிங் சதுரங்க அகாடமி இணைந்து நடத்திய, நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ..
ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ராயல் கிங் சதுரங்க அகாடமி இணைந்து நடத்திய, நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.. Under-9, Under-12, Under-16 பிரிவுகளில் சிறந்த திறமையைக் காட்டிய மாணவ மாணவிகள் வெற்றி கோப்பைகளை பெற்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் டி.அரங்கண்ணல், தாளாளர் திருமதி பி.மாலாலீனா, துணைத் தலைவர் செல்வி மதுவந்தினி அரங்கண்ணல், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் பபிதா , போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போட்டியின் மாநில நடுவர் ஆதாயம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ& மாணவிகளை வாழ்த்தினர்.. மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடந்த இந்த சதுரங்க போட்டி பெற்றோர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
Next Story
