உண்டியலில் பணம் திருடிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் தகவல்

X
Komarapalayam King 24x7 |21 Sept 2025 8:38 PM ISTகுமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பணத்தை உண்டியலில் திருடியதால், போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் சாலை அருகே இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படும் நிலையில், சேலம் திருத்தொண்டர் சபைத் தலைவர் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று வழங்கினார் . அதில் பத்திரகாளி அம்மன் கோவிலில் பரம்பரை பூசாரிகள் பூஜைகள் செய்து வருகின்றனர் .மேலும் இவர்கள் குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் கோவில் உண்டியலில் பணம் திருடி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அரை நிர்வாண கோலத்தில் உள்ளாடையுடன் நடமாடி வருகின்றனர். கோவில் புனிதமான இடம் அரை நிர்வாணமாக உள்ளாடை நிற்பது ஆகம விதிகளுக்கு முரணானது . எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகளையும் வழங்கி உள்ளார். அதில் கோவில் பூசாரிகள் கோவில் உண்டியலுக்குள் கையை விட்டு காணிக்கைகளை திருடுவதும், அரை நிர்வாண கோலத்தில் உடை மாற்றுவது குறித்த காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை, காவல்துறை மற்றும் இந்து அறநிலைத்துறையினர் எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து குமாரபாளையம் (பொ) இன்ஸ்பெக்டர் சங்கீதா கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். செயல் அலுவலர் குணசேகரன் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது.
Next Story
