திருச்செங்கோட்டில் மாலை பெய்த அரை மணி நேர கன மழைசாலைகளில் தேங்கிய மழைநீர் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதி

திருச்செங்கோட்டில் இன்று மாலை சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது இதனால் எஸ்என்டி ரோடு தெப்பக்குளம் ரோடு ஈரோடு ரோட்டில் மழை நீர் தேங்கியது.இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்த முடியாமல் அவதி எதிர்வரும் மழை காலத்தை கடத்தில் கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்க
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பட்டறை மேடு கூட்டப்பள்ளி கொல்லப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த கன மழை மழையின் காரணமாக பேருந்து நிலையத்திலிருந்து சேலம் செல்லும் சாலையான SNDரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள் இன்று மாலை 6.45 மணிக்கு தொடங்கி 7.15 மணி வரை அரை மணி நேரமாக திடீர் மழை பெய்தது. மாலையில் பெய்த மழை குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியது. மழையின் காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீர் வடிகால்கள் வழியாக அம்மன் குளம் வருவது வழக்கம். அவ்வாறு அம்மன் குளத்திற்கு தண்ணீர் செல்ல பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சாதாரண மழையாக இருந்தாலும் தாழ்வான பகுதியாக உள்ள எஸ்என்டி ரோடு சாலையில், (பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் ) மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி ஓடுவதும் தொடர்கதையாக உள்ளது. வழக்கமாகவே ஆறு போல் தண்ணீர் ஓடுவதால் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.மேலும் சில வாகனங்கள் தண்ணீரால் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தண்ணீர் கூட்டப் பள்ளி ஏரிக்குச் செல்லும் வழியில் தேவனாங்குறிச்சி ரோடு தெப்பக்குளம் அருகே இதே போல் தேங்குகிறது மேலும் ஈரோடு ரோட்டிலும் தண்ணீர் தேங்குகிறது.வழக்கமாக மழை பெய்யும் போதெல்லாம் இதே சூழல் ஏற்படுவதால் எதிர்வரும் மழை காலத்தை கவனத்தில் கொண்டு விரைவாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story