அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம் :

X
கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோர் கோவில்பட்டி நகர பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதை அகற்றி, 4 பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது. இதேபோல அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் இயக்காமலும், அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது.
Next Story

