தர்மபுரியில் ஆன்மீகத்தில் ஆனந்தம் சொற்பொழிவு நிகழ்ச்சி

தர்மபுரியில் பேராசிரியர் முனைவர் சங்கரநாராயணன் 'மணிவாசகர் கண்ட திருவாசகம்' என்ற தலைப்பில் ஆன்மீகத்தில் ஆனந்தம் சொற்பொழிவு.
தருமபுரியின் அடையாளங்களில் ஒன்றான ஆன்மீகத்தில் ஆனந்தம் அமைப்பின் 96 ஆவது சிறப்பு நிகழ்ச்சி வன்னியர் மண்டபம் கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது இதில் தலைவர் டிஎன்சி மணிவண்ணன் தலைமையில், பொருளாளர் செயலாளர் சஞ்சீவராயன், ஒருங்கிணைப்பாளர் ஜெகன். முன்னிலை வைத்தனர். தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆன்மீகம் சொற்பொழிவு கண்டு களித்தினர். இந்நிகழ்வில் முனைவர், பேராசிரியர் சங்கரநாராயணன் அவர்கள் 'மணிவாசகர் கண்ட திருவாசகம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
Next Story