இருமத்தூர் ஆற்றில் குவிந்த மக்கள் கூட்டம்
தமிழகத்தில் நேற்று மஹாளய அமாவாசை கடைபிடிக்கப்பட்டது. மஹாளய அமாவாசையில் சூரியனுக்கு நீர் படைத்து வழிபட வேண்டும் இது முன்னோர்களுக்கு செய்யும் முக்கியமான வழிபாடாகும் இதனை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூரில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏளமான பொதுமக்கள் குவிந்து நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர் இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் மூன்று மாவட்ட காவலர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Next Story




