சிவன்மலை கோவிலில் பைக் திருட்டு

சிவன்மலை கோவிலில் பைக் திருட்டு
X
சிவன்மலை மலைக் கோவில் மீது இருசக்கர வாகனம் திருட்டு காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் டிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்
காங்கேயத்தை அடுத்த கீரனூர் ஊராட்சியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவர் கடந்த 19-ந் தேதி சிவன்மலை மலைமேல் உள்ள கோவிலுக்கு பைக்கில் வந்தார். பின்னர் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது பைக் காணவில்லை. பின்னர் கோவில், அலுவலகத்தில் தெரிவித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது ஒரு சிறுவன் பைக்கை திருடிக்கொண்டு மலைமேல் இருந்து கீழே வந்து காங்கேயம்-திருப்பூர் சாலையில் சென்றது பதிவாகி உள்ளது. இது குறித்து சண்முகம் காங்கேயம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பைக் திருடிய சிறுவனை தேடி வருகின்றனர். பைக்கை சிறுவன் திருடிசெல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story