குடிநீர் தொட்டியை திறந்து விடும் போது ஆப்ரேட்டரின் மீது மின்சாரம் பாய்ந்து பலி

குடிநீர் தொட்டியை திறந்து விடும் போது ஆப்ரேட்டரின் மீது மின்சாரம் பாய்ந்து பலி
X
குடிநீர் தொட்டியை திறந்து விடும் போது ஆப்ரேட்டரின் மீது மின்சாரம் பாய்ந்து பலி
குடிநீர் தொட்டியை திறந்து விடும் போது ஆப்ரேட்டரின் மீது மின்சாரம் பாய்ந்து பலி செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே அருங்குணம் கிராமத்தில் குடிநீர் விடுவதற்காக டேங்க் ஆப்ரேட்டர் மாணிக்கம் (வயது 56 )டேங்க் வால்வை திறப்பதற்கு மேலே செல்ல ஏணியை பிடித்துள்ளார்.அப்போது வீட்டிற்கு செல்லும் மின்சார ஓயர் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் ஏணியின் வழியாக சென்றுள்ளது.அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதன்பேரில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story