கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை பிணம் : ஆறு பேர் கைது – உடல் அறக்கட்டளை மூலம் நல்லடக்கம் !
கோவை இருகூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே காவல் துறையினர், சிங்காநல்லூர் மற்றும் நீலிகோணம் பாளையத்தைச் சேர்ந்த மூன்று தம்பதிகளை கைது செய்தனர். 23 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதியரான மரிய லூயிஸ்–ராதாமணி, மகாராஷ்டிராவில் இருந்து சட்ட விரோதமாக குழந்தையை பெற்று வந்துள்ளனர். பின்னர் குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததால், சனிக்கிழமை அன்று சம்பிரதாயப்படி கோழி அறுத்து வழிபாடு செய்துவிட்டு, குழந்தையின் உடலை இருகூர் தண்டவாளத்தில் வீசி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. குழந்தையை சட்டப்படி தத்தெடுக்காதது, இறப்பை மறைத்தது மற்றும் உடலை அவமரியாதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், குழந்தையின் உடல் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து காவல் துறை முன்னிலையில் தனியார் அறக்கட்டளையினரால் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story




