தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்,அசத்திய மாணவர்கள்

தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்,அசத்திய மாணவர்கள்
X
தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்,அசத்திய மாணவர்கள்
செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளியில், தென்மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, கடந்த ஜூலையில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளி மாணவர்கள் ஹரிவிஷால், தர்ஷன், புகழ், துர்வேஷ், தியா, கவுரி, சிந்துஷா ஆகியோர், தேசிய அளவில் ஹரியானாவில் நடை பெறும், குத்துச்சண்டை போட்டிக்குதேர்வாகினர்.இதைத்தொடர்ந்து, ஹரியானாவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி, கடந்த 11ம் தேதி மற்றும் 15ம் தேதி நடந்தது. போட்டியில், மாணவர்கள் ஹரிவிஷால் தங் கப்பதக்கமும், தர்ஷன் வெண்கல பதக்கமும் பெற்றனர். மத்தியப்பிரதேசத்தில், இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமை ப்பு சார்பில் டிசம்பர் மாதம் நடக்கும் முதன்மை போட்டிக்கு, தங்கப்பதக்கம் பெற்ற மாணவன் ஹரிவிஷால் தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சியாளர் ரெமோ ஆகியோருக்கு, பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், துணைத்தலைவர்கள் பிரவீன், லிஜிஷா பிரவின், முதல்வர் டாக்டர் சங்கர நாராயணன் ஆகியோர் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Next Story